கதாநாயகனாக மாறிய விஜய் சேதுபதி மகன்

கதாநாயகனாக மாறிய விஜய் சேதுபதி மகன்

1 mins read
a9ea3dec-3fbd-4e1c-973c-a341e122d241
சூர்யா. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தில் நாயகனாக நடிக்கும் சூர்யா தொடக்கத்தில் அதிரடி சண்டைகள் நிறைந்த படத்தில் நடிக்க விரும்புகிறாராம்.

இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் சூர்யா. அதனால் தமக்கு கேமரா முன் நின்று நடிப்பதில் தயக்கமோ, பயமோ இல்லை என்கிறார்.

குறிப்புச் சொற்கள்