இளையராஜா படத்தில் இணையும் தனுஷ், சிம்பு

1 mins read
593b0ed4-1cf0-4126-89fc-e3c745a62799
சிம்பு, தனுஷ். - படம்: ஊடகம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் நிலையில், அப்படத்தில் சிம்புவும் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இளையராஜாவின் சினிமா வாழ்க்கை மட்டுமின்றி திரைக்குப் பின்னால் அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களும் இப்படத்தில் இடம்பெற உள்ளன.

ஒரு காலத்தில் இளையராஜா குழுவில் ‘கீ போர்ட்’ கலைஞராகப் பணியாற்றினார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகே அவர் இசையமைப்பாளரானார்.

இது தொடர்பான சில சம்பவங்கள் படத்தில் இடம்பெறுமாம். இந்நிலையில் ரகுமான் வேடத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல்.

சிம்பு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவரும் தனுஷும் திரையில் இணையும் முதல் படம் இதுவாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்