மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்பும் நாயகி

மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்பும் நாயகி

1 mins read
97d2e991-c12b-4d8c-8eb2-e0acbe302c1f
பனிதா சாந்து. - படம்: ஊடகம்

மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார் பனிதா சந்து.

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ படத்தில் நாயகியாக நடித்தவர் இவர், பின்னர் பிற மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தெலுங்கில் அதிவி சேஷ் நாயகனாக நடிக்கும். ‘ஜி2’ என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். இது இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியீடு காண உள்ளது.

நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு ஆக்கபூர்வமான அனுபவமாக அமைந்தது,” என்கிறார் பனிதா சந்து.

தமிழில் முன்னணி கதாநாயகன் ஒருவருடன் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் பனிதா தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்