சென்னை திரும்பினார் அஜித்

1 mins read
db1d2381-9aec-400e-bdea-70bc1c75d9f9
அஜித். - படம்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ளார் அஜித்

மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஸர் பைஜானில் நடைபெற்று வந்தது. முதலில் பாடல்களையும் சண்டைக் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்குக்கூட நாடு திரும்பாமல் ஒட்டுமொத்த படக்குழுவும் ஓய்வின்றிப் பணியாற்றியது. இந்நிலையில் ஒருமாத காலம் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக ‘விடாமுயற்சி’ படக்குழு துபாய் செல்லவிருப்பதாகத் தகவல்.

நாடு திரும்பிய கையோடு, கடுமையாக உழைத்த படக்குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தாராம் அஜித்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்