இரு குழந்தைகளைத் தத்தெடுக்கும் சமந்தா

1 mins read
1286f754-6166-4145-9fed-9e1375b95bb8
சமந்தா. - படம்: ஊடகம்

நடிகை சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு ஓய்வெடுத்தபடி சிகிச்சையும் பெற்று வருகிறார் சமந்தா.

இந்நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க சமந்தா விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா தற்போது ‘சென்னை ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆங்கிலத்தில் உருவாகிறது. இந்த ஆண்டு அவர் நடித்து வெளியான ‘சாகுந்தலம்’, ‘குஷி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்