தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அடுத்த ஆண்டு யுவன் சங்கர் ஆண்டு’

1 mins read
d85d9bae-d523-4953-a4a0-7878031ab483
யுவன் சங்கர் ராஜா. - படம்: ஊடகம்

மீண்டும் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் யுவன்சங்கர் ராஜா.

அடுத்த ஆண்டு அவரது இசையமைப்பில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளிவர உள்ளன.

விஜய்யின் `தளபதி 68’, நிவின் பாலியின் `ஏழு கடல் ஏழு மலை’, சூரியின் `கருடன்’, சதீஷின் `கான்ஜுரிங் கண்ணப்பன்’, அமீரின் `மாயவலை’, `இறைவன் மிகப்பெரியவன்’, தவிர `மேதாவி’, `கேங்ஸ் ஆஃப் கோதாவரி’, `நிலமெல்லாம் ரத்தம்’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன்.

அடுத்த ஆண்டு, யுவன் சங்கர் ராஜாவின் ஆண்டு என அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாடுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்