ரியோவைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்

1 mins read
475866b8-7d5f-4ff7-9923-6156dde49a5b
ரியோ, சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

‘ஜோ’ படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் நாயகன் ரியோவைச் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’. இந்தப் படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான ‘ஜோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் ரியோ ராஜ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் படம் சிறப்பாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஜோ’ படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார். அதற்கு நடிகர் ரியோ ராஜ், “நீங்கள் தொடக்கத்தில் நம்பிக்கையைக் கொடுத்தீர்கள். எங்கள் முயற்சியின்போது ஊக்குவித்தது, தற்போது வெற்றிக்குப் பிறகு உங்களின் பாராட்டுக்கு நன்றி அண்ணா,” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி