லோகேஷ் வழியில் வெங்கட் பிரபு

1 mins read
42d89b00-6013-4cc4-a034-6bb70581caeb
வெங்கட் பிரபு. - படம்: ஊடகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என்று படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள பதிவுக்கு, ‘லூப் தொடர்கிறது’ என்று பதில் பதிவிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு.

அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து, மீண்டும் சிம்பு நடிப்பில் ‘மாநாடு-2’ படத்தை அதே ‘லூப்’ கதையில் இயக்கப் போகிறார் என்று சிம்புவின் ரசிகர்களும் தற்போது விஜய் நடித்து வரும் 68வது படத்தையும் ‘மாநாடு’ படத்தைப்போலவே ‘லூப்’ கதை அம்சத்தில்தான் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அதைத்தான் இப்படி ‘லூப்’ தொடர்கிறது என்று அவர் பதிவிட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்