தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்

1 mins read
2f5bf756-9a46-4def-b533-498ca4d6c38b
‘தலைவர் 171’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. - படம்: சமூக ஊடகம்

ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் 171வது திரைப்படத்தை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத்தான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்காலிகமாக ‘தலைவர் 171’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. தற்போது ‘தலைவர் 171’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்