விரைவில் ‘எம்.குமரன் - 2ம் பாகம்’

விரைவில் ‘எம்.குமரன் - 2ம் பாகம்’

1 mins read
ff4d547e-3ba1-40f5-a2f5-7455d505aa38
படம்: - ஊடகம்

கடந்த 2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’. இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்து பல நாள்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மோகன் ராஜா படத்தின் கதையை முழுவதுமாக எழுதி முடித்துள்ளதாகவும், தனி ஒருவன் -2ம் பாகம் வெளியான பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்திலும் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளதாகவும், விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை நதியா கதாபாத்திரம் இடம்பெறாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்