மரக் கன்றுகள் நட்ட ராஷி

மரக் கன்றுகள் நட்ட ராஷி

1 mins read
2e47621e-ab76-4c62-aef2-de4faf8f5e10
ராஷி கன்னா. - படம்: ஊடகம்

தமது பிறந்தநாளை முன்னிட்டு தன் வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார் நடிகை ராஷி கன்னா.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், “மரம் வளர்ப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். எனது பிறந்தநாளில் இந்த அற்புதமான பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறேன்,” என்று தமது பதிவில் ராஷி கன்னா குறிப்பிட்டுள்ளார்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இவர். பின்னர், ‘அயோக்யா’, ‘சங்க தமிழன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் நடித்த நான்கு படங்கள் வெளியீடு கண்டன. தற்போது தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்