தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘என் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள்’

1 mins read
d053e9e3-c747-44de-ad5e-1c370e43be67
மாளவிகா மோகனன். - படம்: ஊடகம்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் பின்னணிக் குரல் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள நடிகை மாளவிகா மோகனன், படத் தயாரிப்பின் மிகப் பயங்கரமான பகுதி என்றால் அது பின்னணிக் குரல் பதிவு (டப்பிங்) பணிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது யாராவது தனது கைகளைப் பற்றிக்கொள்ள முடியுமா?” என்றும் கேட்டுள்ளார்.

‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பார்வதி, பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்