மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ்

மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ்

1 mins read
d292c175-fd3c-466d-80e2-0be4be9a864f
ஜி.வி.பிரகாஷ். - படம்: ஊடகம்

முதன் முறையாக மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் 25ஆவது படமாக உருவாகிறது ‘கிங்ஸ்டன்’.

கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடிக்க தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.

இந்திய கடற்பகுதியில் நடைபெறும் சில சாகசங்கள், திகில் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இதற்காகக் கப்பல் போன்று மிகப்பெரிய அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். சில காட்சிகளை உண்மையாகவே கடலில் படமாக்குகின்றனர்.

கதைப்படி நடுக்கடலில் நிகழும் சில மர்மங்களுக்கு விடைதேடிச் செல்லும் மீனவராக நடிக்கிறாராம் ஜீ.வி.பிரகாஷ்.

குறிப்புச் சொற்கள்