அதிகம் விரும்பப்படுவோர் பட்டியலில் நயன்தாரா, தமன்னா

1 mins read
94f6dee0-dfce-48c8-ae32-5c47202b8deb
தமன்னா, நயன்தாரா. - படம்: ஊடகம்

இந்தியாவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் திரை நட்சத்திரங்களின் பட்டியலை தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஆலியா பட், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் நடிகர் ஷாருகானும், மூன்றாம் இடத்தில் தீபிகா படுகோனும் உள்ளனர்.

இதில் வாமிகா கபி நான்காம் இடத்தைப் பிடித்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நயன்தாராவிற்கு ஐந்தாம் இடம்தான் கிடைத்துள்ளது. ஆறாவது இடத்தை தமன்னா பிடித்துள்ளார்.

கரீனா கபூர், சோபிதா துலிபாலா ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து உள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரும் விஜய் சேதுபதியும் ஒன்பது, பத்தாம் இடங்களைப் பிடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்