மிஷ்கின், விஜய் சேதுபதி, தாணு கூட்டணியில் உருவாகும் ‘ட்ரெயின்’: இது ரயிலில் நடக்கும் கதை

மிஷ்கின், விஜய் சேதுபதி, தாணு கூட்டணியில் உருவாகும் ‘ட்ரெயின்’: இது ரயிலில் நடக்கும் கதை

1 mins read
489012df-3b77-45df-bcee-40162c999c4c
இயக்குநர் மிஷ்கின், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் தாணு. - படம்: ஊடகம்

தமிழ்த் திரை உலகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது ‘ட்ரெயின்’ திரைப்படம்.

விஜய் சேதுபதியும் இயக்குநர் மிஷ்கினும் கூட்டணி அமைத்துள்ளனர். இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். அது இப்போது சாத்தியமாகியுள்ளது.

‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்த கையோடு சில படங்களில் நடிகராக பங்களித்தார் மிஷ்கின். இப்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ‘பிசாசு 2’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து இருந்த விஜய் சேதுபதி கடந்த ஆண்டு இறுதியிலேயே மிஷ்கின் படத்தில் நாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவருமே முன்பே ஒப்புக்கொண்ட படங்களில் கவனம் செலுத்தினர். இந்நிலையில் தயாரிப்பாளர் தாணுவின் முயற்சியில் உருவாகிறது ‘ட்ரெயின்’ படம். ஒரே இரவில் ரயிலில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதையாம்.

இதில் விஜய்சேதுபதி ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இவர்களுடன் நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், எனப் பலர் நடிக்க உள்ளனர்.

‘டெவில்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார் மிஷ்கின். ‘விசில்’, ‘இவன்’ படங்களின் ஒளிப்பதிவாளரான பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

குறிப்புச் சொற்கள்