ஷீலா: திருமண உறவில் இருந்து விலகுகிறேன்

1 mins read
7c43d731-d957-46de-a170-81c84ad59dff
ஷீலா ராஜ்குமார். - படம்: ஊடகம்

வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் கணவர் தம்பி சோழனை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

தன் யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பல நாடகங்களில் நடித்துள்ளார். ஷீலா, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘ஆறாது சினம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், ‘டூ லெட்’, ‘திரெளபதி’, ‘மண்டேலா’, ‘நூடுல்ஸ்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் தனது சமூக வலைத்தளத்தில், “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்” என்று தனது கணவரின் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எதனால் ஷீலா திருமண உறவில் இருந்து வெளியேறினார் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்