தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிரத்னம் படத்தில் மீண்டும் கவுதம் கார்த்திக்

1 mins read
f8db69db-37df-4629-afcc-ee42c548ed1f
கமல்ஹாசன், கவுதம் கார்த்திக். - படம்: ஊடகம்

இயக்குநர் மணிரத்னம் அறிமுகப்படுத்திய ‘கடல்’ படத்திற்குப் பிறகு அவருடைய படத்தில் மீண்டும் நடிக்கிறார் கவுதம் கார்த்திக்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘தக் லைப்’. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கமல் உடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அடுத்தாண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்பொழுது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கவுதம் கார்த்திக் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம்தான் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி