‘அப்பு’ கமலாக மாறிய அசோக் செல்வன்

1 mins read
11a18454-b732-4513-b646-21b5a28f0703
அசோக் செல்வன். - படம்: ஊடகம்

அசோக் செல்வன் ‘அப்பு’ கமலாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபா நாயகன்’. இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபா நாயகன்’. நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் வெற்றிப் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. ‘தலைவர் சொன்னாருன்னு சொன்னியே. இன்றிலிருந்து நான் கமல்ஹாசன் ரசிகன்,” போன்ற நகைச்சுவையான வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி