மீண்டும் திரையரங்குகளில் ‘3’ திரைப்படம்

1 mins read
1d17afad-5a42-46e0-b267-efbd189b8a6b
ஷ்ருதிஹாசன், தனுஷ். - படம்: ஊடகம்

மீண்டும் திரையரங்குகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ திரைப்படம்

நடிகர் தனுஷ், ஷ்ருதிஹாசன் இணைந்து நடித்த படம் ‘3’. இந்தப் படம் 2012ல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளிவந்தது. அந்த சமயத்தில் படத்திற்கு சுமாரான வரவேற்பே இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் கமலா திரையரங்கில் மீண்டும் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. இதனால் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சில திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதற்கு நடிகர் தனுஷ் தன்னுடைய வலைத்தளத்தில் ரசிகர்களின் ஆதரவு தன்னை மிகவும் நெகிழ வைத்துள்ளதாகவும் மிகவும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். 

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி