தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக்ரோஷத்துடன் விஷால்

1 mins read
a6d1dcb9-1eaa-4780-aaed-622b05fc3aaa
விஷால். - படம்: ஊடகம்

‘ரத்னம்’ படத்தில் விஷால் கையில் ஒரு தலையுடன் ஆக்ரோஷமாக இருக்கும் சுவரொட்டி வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்னம்’. இந்தப் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முன்னோட்டக்காட்சி நேற்று முன்தினம் வெளியானது. அண்மையில் ஆக்ரோஷத்துடன் விஷால் நிற்கும் சுவரொட்டியை படக்குழு வெளியிட்டது. அந்த சுவரொட்டியை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். ‘ரத்னம்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி