ராஷ்மிகாவைப் பாராட்டிய மகேஷ் பாபு

ராஷ்மிகாவைப் பாராட்டிய மகேஷ் பாபு

1 mins read
07f8c1f9-85c0-4eae-b2ec-00af591a2f29
ராஷ்மிகா மந்தனா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ் பெற்று விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பட நிகழ்ச்சியில் ராஷ்மிகா பற்றி நடிகர் மகேஷ்பாபு பேசும்போது, “ராஷ்மிகா அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்று பாராட்டியதுடன் இனி அவர் நடிப்பதற்காக ஒரு புதிய மொழியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் எனக் கூறி பலத்த கைதட்டலைப் பெற்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்