மறக்க இயலாத நவம்பர் மாதம்: கீர்த்தி சுரேஷ்

மறக்க இயலாத நவம்பர் மாதம்: கீர்த்தி சுரேஷ்

1 mins read
2fec2372-94eb-4c7b-855b-fb628afe58f6
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

நவம்பர் மாதம் வந்துவிட்டால் மனதில் உற்சாகம் மிகுந்திருக்கும் என்கிறார் கீர்த்தி சுரேஷ். காரணம், அந்த மாதத்தில்தான் தாம் அதிக மகிழ்ச்சியோடு பல நாள்களைக் கொண்டாடுவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

“தீபாவளிக் கொண்டாட்டம், என் அப்பா, அம்மாவின் பிறந்தநாள் ஆகியவை நவம்பரில்தான் வருகின்றன. அதேபோல், திரையுலகில் அறிமுகமாகி கடந்த நவம்பர் மாதத்துடன் பத்து ஆண்டுகள் நிறைவடைந்தன.

“எனவேதான், நான் மறக்க இயலாத நாள்களைக் கொண்டுள்ள நவம்பர் மாதம் எனக்கு மிக முக்கியமானது,” என்று குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி.

மேலும், தீபாவளி, பெற்றோரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தற்போது தமிழில் ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்