‘3’ படம் மறு வெளியீடு; நெகிழ்ந்துபோன தனுஷ்

1 mins read
5d42e8f4-c0fa-434b-bb41-0708bee1c5ac
‘3’ படத்தில் தனுஷ், ஷ்ருதி. - படம்: ஊடகம்

தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘3’ திரைப்படம் மறு வெளியீடு கண்டுள்ளது.

சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் வெளியிடப்பட்ட படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, கோவை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி நகரங்களிலும் ‘3’ படத்தை சில திரையரங்குகளில் மறு வெளியீடு செய்துள்ளனர்.

இதனால் நெகிழ்ந்துபோன தனுஷ், “ரசிகர்களின் ஆதரவைப் பார்த்தபோது உணர்ச்சிவசப்படுகிறேன். அவர்களுக்கு எனது மில்லியன் நன்றிகள்,” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

‘3’ படத்தில் தனுஷும் ஷ்ருதிஹாசனும் இணைந்து நடித்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்