ஐம்பதாவது படத்தை தாமே இயக்கி நடிக்கும் சிம்பு

1 mins read
036cc9f9-78c3-48b9-bdf2-0f58d08ed9c6
சிம்பு. - படம்: ஊடகம்

நடிகர் தனுஷ் வழியைப் பின்பற்றி தனது ஐம்பதாவது படத்தை தாமே இயக்கி, நாயகனாக நடிக்க உள்ளார் சிம்பு.

‘பத்து தல’ படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இது அவருடைய 48வது படமாகும்.

ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில் தனது ஐம்பதாவது படம் தொடர்பாக பெரிய திட்டங்களை வகுத்துள்ளாராம் சிம்பு. அப்படத்துக்கான கதை, திரைக்கதையை அவர் தற்போது எழுதி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ‘வல்லவன்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ள சிம்பு, ‘மன்மதன்’ படத்தில் கதாசிரியராகவும் பணியாற்றி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்