தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகைச்சுவை நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்

1 mins read
6617d9a8-9d93-4521-9c01-f013245560ec
லட்சுமி மேனன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகை லட்சுமி மேனன் நகைச்சுவை நடிகருக்கு மனைவியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் பல படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

அதன்பின் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதனையடுத்து, விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நடிகை லட்சுமி மேனன் யோகி பாபு நாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு.

இந்தத் திரைப்படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகும் என தெரிகிறது. படம் குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி