மோசமான நிர்வாகம்; சாடும் சந்தோஷ் நாராயணன்

மோசமான நிர்வாகம்; சாடும் சந்தோஷ் நாராயணன்

1 mins read
a78d2bd0-d7d6-45fc-960b-710e2756d3f1
சந்தோஷ் நாராயணன் - படம்: ஊடகம்

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வெள்ள நிலவரம் தொடர்கிறது. இதற்கு அரசுதான் காரணம். நிர்வாகத்தைக் கண்டிக்கவேண்டிய விஷயம் என்கிறார் சந்தோஷ் நாராயணன்.

தமிழ்த் திரையின் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். சென்னை பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “தொடர்ந்து 10 ஆண்டுகள் வெள்ளப்பெருக்கில் எங்கள் குளப்பாக்கம் பகுதி வீடுகள் மழை நீரால் சூழப்படுவதும், 100 மணிநேரம் மின்சார தடையும் எதிர்கொள்கிறோம்.

“குளப்பாக்கம் ஏரியோ, தாழ்வான பகுதியோ அல்ல. பரந்த நிலமும், நீர்நிலைகளும் உள்ள பகுதி. அலட்சியம், பேராசை, மோசமான நிர்வாகமே மழை நீரையும், சாக்கடையையும் ஒரே கால்வாய்க்குள் கலக்க செய்து இப்பகுதியை நீரில் மூழ்கடிக்கிறது.

“இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவதும் மோசமாகப் பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடம் படகு உள்ளது. என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்,’’ என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்