படத்தின் காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சியில் படக்குழுவினர்

1 mins read
ac265a92-db0e-4840-ab8a-733d99d1b0d9
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரது 21வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதத்துக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் காட்சிகள், இணையத்தில் கசிந்துள்ளன. சாய்பல்லவியும் அவர் குழந்தையும் சிவகார்த்திகேயனுக்காக காத்திருப்பதுபோல அந்தக் காட்சிகள் உள்ளன.

இதற்கிடையே, இந்தக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரவேண்டாம் என்று சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்