வன்முறைதான் படமா? அமீர்கான் சாடல்

1 mins read
c1a7c7c5-7141-439d-aa6e-fb3ca88d7e35
(இடமிருந்து) அஜித், அமீர் கான், விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இளம் இயக்குநர்களின் படங்கள் பெரும்பாலும் வன்முறை, பாலியல் சம்பந்தமாக இருப்பது பற்றி காட்டமாக விமர்சித்துள்ளார்.

அமீர்கான், தற்காலிகமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், இளம் இயக்குநர்களின் திரைக்கதைகள் குறித்து அமீர்கான் விமர்சனம் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழில் அண்மையில் வெளியான ‘ஜெயிலர்’, ‘லியோ’ திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருந்தன.

அதேபோல், பாலிவுட்டில் தற்போது வெளியாகியுள்ள ‘அனிமல்’, தெலுங்கில் வெளியாகவுள்ள ‘சலார்’ ஆகிய படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

“வன்முறைக் காட்சிகள் இல்லாமல் படம் எடுக்க முடியாதா? இதுபோன்ற படங்களை சிறுவர்களுடன் சென்று பார்க்க குடும்பத்தினர் அச்சப்படுகிறார்கள்”.

“நெல்சன், லோகேஷ் கனகராஜ், ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா போன்ற இயக்குநர்களுக்கு படத்திற்கு கதைகளைத் தேர்வு செய்யத் தெரியவில்லை,” என்றார் அமீர்கான்.

அதீத வன்முறை, பாலியல் காட்சிகள் மட்டும்தான் படமா, கதை இல்லாமல் எப்படிப் படம் எடுக்கிறார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார் அவர். ‘லகான்’, ‘ரங் தே பசந்தி’, ‘பிகே’ போன்ற தரமான படங்களில் நடித்துப் பிரபலமானவர் அமீர்கான்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்