தங்கைக்கு இலவச விளம்பரம் தேடிய ஜான்வி

1 mins read
9ca7cb34-6f6b-45e6-8fd8-54c2b1620ea3
தங்கை குஷியுடன் ஜான்வி. - படம்: ஊடகம்

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டகிராமில் வெளியிடும் பதிவுகளுக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. இந்த தளத்தில் அவரை 22 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், தனது தங்கையும் நடிகையுமான குஷி கபூர் நடித்துள்ள ‘தி ஆர்சிஸ்’ என்ற படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் ஜான்வி.

சிறப்புக் காட்சியைத் தொடர்ந்து இரவு விருந்தும் நடைபெற்றுள்ளது. அதில் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்தார் ஜான்வி.

அந்த கவர்ச்சிகரமான உடையில் அவர் ரசித்து, ருசித்து சாப்பிடுவது, குளிர்பானம் அருந்துவது உள்ளிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

மேலும், தங்கை நடித்துள்ள படத்துக்கு இதுபோன்று இலவசமாக விளம்பரம் தேடிக்கொடுத்த சாமர்த்தியசாலி என்றும் அவரைப் பாராட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்