அடி வாங்குவதும் நல்ல அனுபவம்தான்: கல்யாணி

1 mins read
a30e9986-3d8c-45d4-9abd-c4159a70495d
கல்யாணி பிரியதர்ஷன். - படம்: ஊடகம்

ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக அடி வாங்குவதும்கூட நல்ல அனுபவம்தான் என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

இவர் நடித்த மலையாளப் படமான ‘ஆண்டனி’ அண்மையில் வெளியீடு கண்டது. இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

மேலும், தனது கதாபாத்திரத்துக்காக தற்காப்புக் கலைகளையும் குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டாராம்.

இந்நிலையில், இப்படத்துக்காக சண்டைக் காட்சிகளில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“இந்தப் படத்துக்காக நான் வாங்கிய குத்துகள், உதைகள் மட்டுமல்ல, எனக்கு ஏற்பட்ட ரத்தக் காயங்களும்கூட உண்மைதான்.

“நான் விட்ட கண்ணீரும் திரையில் ரசிகர்கள் கண்ட எனது புன்னகையும்கூட நிஜம்தான். இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே இயலாது,” என்று பேட்டி ஒன்றில் கல்யாணி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்