கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி

1 mins read
c2295170-6e9a-43ba-9578-ac4423293986
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

தெலுங்கு, தமிழ், மலையாளம் என மும்மொழிகளில் நடித்து வரும் சாய் பல்லவி கன்னடத்திலும் அறிமுகமாக உள்ளார்.

தனது முதல் படத்திலேயே கன்னடத் திரையுலகின் வசூல் மன்னன் என்று கூறப்படும் யஷ் ஜோடியாக நடிக்கிறாராம்.

நடிகையும் மலையாள இயக்குநருமான கீது மோகன் தாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

கோவா பகுதியில் இயங்கி வரும் ஒரு குண்டர் கும்பலின் செயல்பாடுகளை விவரிக்கும் கதையாம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக உருவாகிறது.

இதில் தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாகத் தகவல்.

இந்தப் படத்தில் நடிக்க இவர் கேட்ட தொகையை எந்தவித தயக்கமும் இன்றி தயாரிப்புத் தரப்பு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்