‘யாரும் காணாத விண்மீனே’ பாடலுக்கு வரவேற்பு

1 mins read
5c3305b0-69fd-412f-983a-aa9a0a775f75
‘ஃபைட் கிளப்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’. இந்தப் படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். ‘யாரும் காணாத விண்மீனே’ என்று தொடங்கும் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் பலர் இப்பாடலை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, இந்தப் படம் எதிர்வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்