இந்த உலகத்தையே மாற்றிவிடலாம்: சமந்தா

1 mins read
fb4ac305-dbf3-48fa-85f6-8692a7e7fd7b
குழந்தைகளுடன் சமந்தா. - படம்: ஊடகம்

“ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர் இருந்தால் இந்த உலகத்தையே மாற்றிவிடலாம்,” என்கிறார் நடிகை சமந்தா.

அண்மையில் ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சென்று இருந்தாராம்.

அங்குள்ள குழந்தைகளுடன் பேசியதும் விளையாடி மகிழ்ந்ததும் அற்புதமான தருணம்,” என்று அவர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அச்சமயம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமந்தா பகிர்ந்துள்ளார்.

“நாம் வெளிப்படுத்தும் அன்பைவிட குழந்தைகள் இருமடங்காக நமக்குத் திருப்பித் தருகிறார்கள். குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்கும்போது பல நல்ல விஷயங்கள் புலப்படுகின்றன,” என்றும் சமந்தா தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்