‘சூர்யா தமிழ்த் திரையுலகுக்கு கிடைத்த வரம்’

1 mins read
ec9e2fbc-ff88-44b2-8a75-470b8e57c267
பாபி தியோல், சூர்யா. - படம்: ஊடகம்

சூர்யாவை போன்ற அற்புதமான நடிகர் தமிழ் திரை உலகத்திற்கு கிடைத்த வரம் என்கிறார் இந்தி நடிகர் பாபி தியோல்.

‘கங்குவா’ படத்தில் இவரும் சூர்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது சிறந்த அனுபவம் என்று பாபி கூறியுள்ளார்.

“’கங்குவா படத்தில் இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தமிழ் மொழி தெரியாது. எனவே தமிழ்ப் படத்தில் நடிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். இயக்குநர் ஒன்று இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்தபோதிலும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை.

“இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா மிகவும் இனிமையானவர். எனது பிரச்சினையைப் புரிந்து கொண்டு சங்கடங்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்,” என்கிறார் பாபி தியோல்.

‘கங்குவா’ திரைப்படம் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

பத்து மொழிகளில் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் சூர்யா ஜோடியாக இஷா பதானி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்