விஜய் சேதுபதியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்

1 mins read
857065b8-17b2-45a5-b8d8-ac3bbf8deb45
விஜய் சேதுபதி, மம்முட்டி. - படங்கள்: ஊடகம்

விஜய் சேதுபதி அடுத்து நடிக்க உள்ள படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் இப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதையடுத்து அந்தக் கதாபாத்திரத்திற்கு இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் மணிகண்டன் விஜய் சேதுபதியை வைத்துப் புதுப்படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்திற்காகத்தான் மம்முட்டியை ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால் திடீரென இந்த கதை இணையத்தொடராகப் படமாக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த மம்முட்டி படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இது வருத்தம் அளித்தாலும் மம்முட்டிக்கு பதிலாக ஷெராஃப் ஒப்பந்தம் ஆனதில் திருப்தி அடைந்துள்ளார் விஜய் சேதுபதி.

ஜாக்கி ஷெராஃப்பை பொறுத்தவரை தமிழில் ஏற்கெனவே ‘ஆரண்ய காண்டம்’, ‘திகில்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்