ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி

ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி

1 mins read
26bd5d41-cf48-4eaf-be32-cc8df0bc854b
ஹாய் நான்னா படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

முதல் முறையாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பின்னனி இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் நடிகர் நானி, நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள படம் ‘ஹாய் நான்னா’. வைரா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

அப்பா - மகள் உறவை மையமாக வைத்து அதில் ஒரு அழகிய காதலையும் சேர்த்து இந்தப் படத்தின் கதை உருவாகி உள்ளது.

ஏற்கெனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. பாடல்கள், முன்னோட்டக் காட்சி வரவேற்பை பெற்றுள்ளன.

இப்போது இந்தப் படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பின்னனி இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரையில் ஏன் இந்திய சினிமாவில் கூட இது முதல் முயற்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்