தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உருவக் கேலி அழ வைத்தது: கீர்த்தி பாண்டியன்

1 mins read
cb2b7f14-6fdb-49f3-8328-8dc019e35bb1
கீர்த்தி பாண்டியன். - படம்: ஊடகம்

உருவக் கேலியை யாரும் அனுமதிக்க கூடாது என்கிறார் கீர்த்தி பாண்டியன். தாம் உருவக் கேலிக்கு ஆளானபோது பலமுறை கண்ணீர் விட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நீண்டகாலம் ஒல்லியாகவும் கருப்பாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், உருவக்கேலி என்பது ஒருவரை வெகுவாக மனம் நோகச் செய்யும் எனக் கூறியுள்ளார்.

“முன்பெல்லாம் வெயிலில் அதிகம் சுற்றித் திரிவேன். அதனால் கருப்பாக இருந்தேன். இதைப் புரிந்துகொள்ளமல் பலர் எனது தோற்றத்தைக் கிண்டல் செய்தபோது கவலையில் ஆழ்ந்து, அழவும் செய்தேன்.

“ஆனால் இப்போது கடந்த காலத்தைப் பற்றி யோசிக்கும்போது பலருக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது,” என்று அண்மைய பேட்டியில் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இவர் நடித்துள்ள ‘கண்ணகி’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரைகாண உள்ளது. இந்நிலையில் இவரது கணவரும் நடிகருமான அசோக் செல்வன் நடித்துள்ள ‘சபாநாயகன்’ படமும் அதே தேதியில் வெளியீடு காண்கிறது.

குறிப்புச் சொற்கள்