நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமணம்

1 mins read
ddb6dbcd-b201-4c75-9a36-655580001424
மனைவி சங்கீதாவுடன் ரெடின் கிங்ஸ்லி. - படம்: ஊடகம்

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, தொலைக்காட்சித் தொடர் நடிகை சங்கீதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பிரபலமானார் ரெடின் கிங்ஸ்லி. அதன் பின்னர் ‘எல்.கே.ஜி’. ‘நெற்றிக்கண்’, ‘டாக்டர்’, ‘அண்ணாத்த’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’, ‘மார்க் ஆண்டனி’ என வரிசையாகப் பல படங்களில் நடித்துள்ளார்.

கைவசம் மேலும் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளாராம்.

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ள சங்கீதாவை அவர் மணந்துள்ளார். தற்போது ‘ஆனந்தராகம்’ என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார் சங்கீதா.

இவர்களின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்