‘பிக்பாஸ்’ கவின் ஜோடியாக பிரியங்கா

1 mins read
483bf20f-ddbd-4903-88a0-1527fcc3232d
பிரியங்கா மோகன். - படம்: ஊடகம்

அண்மைக் காலமாக தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா மோகன் மீண்டும் கோடம்பாக்கம் பக்கம் தனது பார்வையைத் திருப்பி உள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் ‘பிக்பாஸ்’ கவின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியங்காவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. அனிரூத் இசையமைப்பார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

இதில் வித்தியாசமான கதைக்களம் அமைந்துள்ளதாகச் சொல்கிறார் பிரியங்கா.

குறிப்புச் சொற்கள்