‘வாடிவாசல்’ படத்தில் இருந்து விலகும் சூர்யா

1 mins read
e7e686d7-e150-418d-9a29-1800be961cf6
இயக்குநர் வெற்றிமாறன் (இடது), சூர்யா. - படங்கள்: ஊடகம்

‘வாடிவாசல்’ படத்தில் இருந்து சூர்யா வெளியேற இருப்பதாகக் கூறப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் சூர்யாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதனால்தான் அவர் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘பருத்திவீரன்’ பட விவகாரம் தொடர்பாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்புக்கும் அமீர் தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. எனவே ‘வாடிவாசல்’ படத்தில் அமீர் நடிப்பதாக இருந்தால் அதில் சூர்யா நடிக்க விரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது.

“வெற்றிமாறன் அமீரை இப்படத்தில் இருந்து நீக்கவேண்டும் அல்லது அமீர் தாமாக விலக வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடந்தால்தான் வாடிவாசல் படம் வளரும்,” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்