படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் சமந்தா

1 mins read
b56e14eb-d43e-41d8-b14e-fa7a4209569f
சமந்தா. - படம்: ஊடகம்

நடிகை சமந்தா புதிதாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளார். அதற்கு ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என பெயர் சூட்டி உள்ளார்.

“புதிய சிந்தனைகள் அடங்கிய கதைகள், கருத்துகளை முன்னிலைப்படுத்துவதே இதன் நோக்கம். நமது சமூகக் கட்டமைப்பின் வலிமையானதும் சிக்கலானதுமான தன்மைகள் கொண்ட கதைகளை இந்த தளம் ஊக்குவிக்கும். அதே சமயம் படைப்பாளிகள் உண்மையான, அர்த்தமுள்ள, உலகளாவிய படைப்புகளை வெளிப்படுத்தவும் இந்த தளம் உதவியாக இருக்கும்,” என்கிறார் சமந்தா.

அவர் சிறு வயதில் ‘பிரவுன் கேர்ள்ஸ் இன் ரிங் நவ்’ என்ற ஆங்கிலப் பாடலால் வெகுவாக ஈர்க்கப்பட்டு இருந்தாராம். அந்தப் பாடலில் இருந்து உருவானதுதான் இந்நிறுவனத்தின் பெயர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

நல்ல கதைகளைச் சொல்வதற்குத் தமது நிறுவனம் ஊக்கம் அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ள சமந்தா, எம்.டிவியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகப் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்