அமோகமாக வியாபாரம் ஆனது அயலான்

1 mins read
7e0f048e-7077-4440-a06e-4115f69e826e
அயலான். - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வியாபாரம் முடிந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக உருவாகி வருகிறது அயலான் படம். தமிழ் சினிமாவில் சில சமயங்களில் சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படி ஒரு ஆச்சரியம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்திற்கு நடந்துள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இப்படம் கடந்த ஐந்து வருடங்களாக உருவாகி வருகிறது. இவ்வளவு நீண்ட காலம் தயாராகும் படங்களுக்கு குறிப்பிடும் அளவு வியாபாரம் நடக்காது என்று கூறப்படும் நிலையில் அந்தக் கூற்றை ‘அயலான்’ முறியடித்திருக்கிறது.

இப்படத்தின் தமிழக விநியோக உரிமை படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே முடிந்தது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏஆர் ரஹ்மான் இசை, புதிய கதைக்களம், ‘விஎப்எக்ஸ்’ காட்சிகள் என இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள். இத்தனை ஆண்டு போராட்டத்திற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் மீது தனிப்பட்ட சர்ச்சையை சிலர் கிளப்பியுள்ள நிலையில் அது அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கவில்லை என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி