சிக்கலில் சூர்யா

சிக்கலில் சூர்யா

2 mins read
6e322959-b5d5-41f9-9367-d767221b7a35
சூர்யா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘பருத்தி வீரன்’ பஞ்சாயத்தே இன்னும் ஓயாத நிலையில், சூர்யாவின் பெயர் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக ‘பருத்தி வீரன்’ படம் தொடர்பாகப் பிரச்சினை நடந்து வருகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து, படுமோசமாக விமர்சனம் எழுந்தபோதும், சூர்யா, கார்த்தி இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர்.

கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சூர்யாவிற்கு சினிமாவில் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் ‘ஜெய் பீம்’. நேரடியாக ஓடிடியில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் பாராட்டினார்கள். அந்த நேரத்தில், நடிகர் சூர்யா முதலமைச்சருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை, இருளர் அமைப்பிற்காக கொடுத்திருந்தார்.

தற்போது பருத்திவீரன் பஞ்சாயத்து பெரிதாகி இருக்கும் நிலையில், ‘ஜெய் பீம்’ படத்திற்கு இருளர் அமைப்புக்கு பணம் கொடுத்தது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சூர்யா இருளர் அமைப்பிற்கு கொடுத்த தொகை அவருடைய சொந்த பணம் இல்லை என்றும் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ அமைப்பில் இருந்துதான் சூர்யா அந்தத் தொகையை கொடுத்திருக்கிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

அது மக்கள் அகரம் நிறுவனத்திற்காக கொடுத்த பணம்தான் எனவே எப்படிப் பார்த்தாலும் அந்த பணம் சூர்யாவின் கைகளுக்குத்தான் போய்ச் சேரும். படத்தில் நடித்ததோடு விட்டுவிடக்கூடாது என்று படத்தின் விளம்பரத்திற்காக அவர் இதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் ‘பருத்தி வீரன்’ சர்ச்சைக்கு சூர்யா வாய் திறக்காததுதான் அடுத்தடுத்த சர்ச்சைக்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி