இரண்டு வேடங்களில் நடிப்பதால் எடையைக் குறைத்த அஜித்

1 mins read
5a282588-5a0a-4033-b5f0-417b5c07efe2
படப்பிடிப்பில் அஜித். - படம்: ஊடகம்

விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் தன்னுடைய உடல் எடையில் 15 கிலோவை குறைத்து இருக்கிறார்.

துணிவு படத்தை அடுத்து தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் அவருடன் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் அங்கு இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீவிர உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை கடைப்பிடித்து 15 கிலோ வரை எடைக் குறைத்து நடித்து வருவதாக படக்குழுவினர் கூறி வருகிறார்கள்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்ட பிறகு வெளியாகும் புகைப்படங்களில் அஜித் குமார் முன்பு இருந்ததை விட மிகவும் எடை குறைந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்