வில்லனாக தமிழில் அபி‌ஷேக் பச்சன்

1 mins read
8190c2b8-f397-4609-9822-2fb33f36d86c
அபி‌ஷேக் பச்சன். - படம்: ஊடகம்

மோகன் ராஜா இயக்க இருக்கும் ‘தனி ஒருவன் - 2’ படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் அபி‌ஷேக் பச்சன்.

கடந்த 2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, தம்பி ராமைய்யா, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. அப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமின்றி அதற்கு முன்பே அவர் இயக்கிய ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார் மோகன்ராஜ்.

தற்போது தனி ஒருவன்- 2 படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல நடிகர்களை பரிசீலனை செய்து வந்த மோகன் ராஜா, இறுதியில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

முதல் பாகத்தில் அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வில்லன் வேடம் முக்கியத்துவம்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்