பெரும் தொகைக்கு விலைபோனது ‘ரத்னம்’

1 mins read
e3075b6d-e9ed-4541-b29e-c1c696983a35
விஷால். - படம்: ஊடகம்

விஷாலின் ‘ரத்னம்’ படத்தின் ஓடிடி உரிமம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விற்பனையானது.

விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க போராடி வந்த விஷாலுக்கு இப்படத்தின் வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, விஷால் தற்போது கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ரத்னம்’. இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹரியின் ‘யானை’ படத்தைத் தொடர்ந்து ப்ரியா பவானி ஷங்கர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றிருக்கிறது. விஷால் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்