நாயகனான சின்னத்திரை தொகுப்பாளர் விஜய்

நாயகனான சின்னத்திரை தொகுப்பாளர் விஜய்

1 mins read
25d919a3-c809-4559-92cb-acadef555cc1
விஜய். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய், படத்திலும் தொகுப்பாளராகவே நாயகனாக நடிக்கிறார்.

வானொலி மற்றும் சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர் ஆர்.ஜே.விஜய். தற்போது பிரம்மாண்ட திரை விழாக்களில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். ‘டான்’ உள்ளிட்ட சில படங்களில் நாயகனின் நண்பனாக நடித்தார். இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் ஹேமநாதன் கூறும்போது, “இது கணவன், மனைவி இடையிலான அன்பு, ஈகோ இரண்டையும் சொல்லும் கதை. கணவனாக விஜய்யும் மனைவியாக அஞ்சலி நாயரும் நடிக்கிறார்கள். கதைப்படி நாயகன் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனால் ஆர்.ஜே.விஜய்யை அந்தக் கதாபாத்திரத்திலேயே நடிக்க வைக்கிறோம். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி