தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட விளம்பரத்திற்கு விருப்பம் தெரிவிக்காத பிரபாஸ்

1 mins read
cc6da9e6-8e26-4c3a-ae14-db32e14b5fac
பிரபாஸ். - படம்: ஊடகம்

தொடர் தோல்வியால் ‘சலார்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பிரபாஸ் கலந்துகொள்ளவில்லை.

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளி வந்த ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ஆகிய மூன்று படங்களுமே மிகப் பெரிய அளவில் தோல்விகளைச் சந்தித்தன. இந்தப் படங்களுக்கு பிரபாஸ் அதிகமாக விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஆனால், அது எதுவும் படத்தின் வெற்றிக்கு வழிவகை செய்யவில்லை.

அதனால் வெறுத்துப்போன பிரபாஸ் ‘சலார்’ படத்தின் விளம்பர சுற்றுப்பயணம் எதற்கும் வர மாட்டேன் என சொல்லிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது திடீர் அறிவிப்பால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகிறார்கள். படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் எந்தவிதமான சுற்றுப்பயணமும் இருக்காது என்றே தெரிகிறது.

அதனால் நடிகர்கள், நடிகைகளின் படத்தைப் பற்றிய அனுபவத்தைக் காணொளியாக எடுத்து அதை மட்டும் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளது படக்குழு.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்