வட்டார வழக்கில் பேச பயிற்சி பெறும் சாய் பல்லவி

1 mins read
d6249a1c-f3b4-4adb-87a0-2053d38af71c
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

சாய் பல்லவி மீனவர்கள் பேசுவதைப்போல பேசிப் பழக பயிற்சிப் பட்டறையில் சேர்ந்து பேசி வருகிறார்.

நடிகை சாய் பல்லவி இப்போது தெலுங்கில், ‘தண்டேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்கிய ‘லவ் ஸ்டோரி’ படத்திற்குப் பிறகு இவர்கள் இந்தப் படத்தில் மீண்டும் இணைகின்றனர். இந்தப் படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்கிறார். சாய் பல்லவி மீனவப் பெண்ணாக நடிக்கிறார். அதற்காக அவருக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்ட வட்டார வழக்கில் பேசப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேடி கூறும்போது, “படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்ண்டு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி பெற்றார். சாய் பல்லவி அர்ப்பணிப்போடு அதை கற்றுக்கொண்டார்” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்