தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுபமா: ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நான் தயார்

1 mins read
5fede4dd-b9fd-4022-b10a-fffe33be98f7
அனுபமா. - படம்: ஊடகம்

ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் முத்தக் காட்சியில் நடிக்கத் தயார் என்கிறார் அனுபமா.

அனுபமா தமிழில் ‘கொடி’ மூலம் அறிமுகமானார். தற்பொழுது ‘சைரன்’ படத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ‘ரவுடி பாய்ஸ்’ என்ற தெலுங்கு படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

மேலும் இவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘சைரன்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் பட வாய்ப்புக்காகப் படுக்கை அறை காட்சியில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும், முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்பு நடிகை அனுபமா பரமேஷ்வரன் படங்களின் தொடர் வெற்றியால் தன் சம்பளத்தை உயர்த்தியதாக செய்தி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்